உடல் ஆரோக்கியம்
ஆரோக்கியமான வாழ்கைக்கு சமச்சீரான உணவு அவசியம், அன்றாட வாழ்வில் சாப்பிட வேண்டிய ஆரோக்கியமான உணவுகளை பற்றி காணலாம்.
புரதம் நிறைந்த உணவு
தினசரி உணவில் மெல்லிய புரத மூலங்களைச் சேர்ப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மைகளைத் தருகின்றன. மீன், பீன்ஸ், பருப்பு, டோஃபு போன்றவை நோயெதிர்ப்பு செயல்பாட்டை மேம்படுத்தவும், தசைகளின் செயல்பாட்டுக்கும் உதவுகிறது. மேலும் இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் தேவையான அமினோ அமிலங்களை வழங்குகிறது.
கீரைகள்
கீரைகள், காலே ஆகிய பச்சை கீரைகளில் வைட்டமின்கள், மினரல்கள் மற்றம் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. அவற்றில் கலோரிகள் குறைவாக உள்ளது. ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. உடல் எடையை ஆரோக்கியமாக பராமரிக்க உதவுகிறது. அது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சிக்கும் உதவுகிறது.
பெரிகள்ஸ்ட்ராபெரி, ப்ளூ பெரி மற்றும் ராஸ்பெரி என பெரி பழங்களில், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. அது உங்கள் உடலின் நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்க உதவுகிறது. உங்கள் உடலில் உள்ள செல்கள் சேதமடைவதை தடுக்கிறது.
மீன்
சதை அதிகம் உள்ள சால்மன், மெக்கரீல், சார்டைன் போன்ற மீன்களில் உள்ள ஒமேகா – 3 ஃபேட்டி ஆசிட்கள் இதயம் மற்றும் மூளைக்கு மிகவும் நல்லது. இவை நல்ல புரதச்சத்தையும் வழங்குகின்றன.
முட்டை
முட்டை, புரதச்சத்து நிறைந்த உணவு. தேவையான வைட்டமின்கள் மற்றும் மினரல்களை கொண்டுள்ளது. இவை தசை வளர்ச்சிக்கும், அதை சரிசெய்யவும் உதவுகிறது.
தண்ணீர்
தண்ணீர் உடலை நீர்ச்சத்துடன் வைத்திருக்க உதவுகிறது. உடல் நீர்ச்சத்துடன் இருந்தாலே பதும், ஒட்டுமொத்த உடல் இயக்கமும் நன்றாக இருக்கும்.
நம் உடலில் கபத்தின் அளவை சீராக வைக்க தேன் உதவுகிறது. இது ஒரு ஆயுர்வேத மருந்தும் கூட. நீங்கள் தினமும் தேன் சாப்பிடுவது நோய்களை எதிர்த்து போராட உதவுகிறது. டாக்டர் வரலட்சுமி தேன் மிகச்சிறந்த உணவு வகை என்று கூறியுள்ளார். ஆனால் அதை சுடுநீருடன் சேர்த்து அல்லது அதை சுட வைத்து உட்கொள்வது தவறு என்கிறார். அவ்வாறு தேனை சுட வைக்க, அது தன் மருத்துவ குணங்களை இழந்து விடும், எனவே நம் உடலுக்கு அதனால் நற்பலன்கள் கிடைக்காது என்று கூறுகிறார்
பாதாம் வைட்டமின் ஈ, ஆக்ஸிஜனேற்றிகள், மெக்னீசியம், நார்ச்சத்து நிறைந்த ஒரு பிரபலமான கொட்டை ஆகும். எடை இழப்பு , வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்தை மேம்படுத்த பாதாம் பங்களிக்கும்.
Comments
Post a Comment